Rock Fort Times
Online News

தீபாவளியை முன்னிட்டு ரூ100-க்கு 10 வகை காய்கறிகள்… * தமிழக அரசின் சிறப்புத் திட்டம் இன்று தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ரூ100-க்கு 10 வகை காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று(05-11-2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னை மாநகரின் 4 நடமாடும் காய்கறிகள் அங்காடிகள் மூலம், இன்று முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 3 நாட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி தலா 500 கிராம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் தலா 250 கிராம், கேரட், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், ஒரு தேங்காய் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தமிழக அரசு சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம்’ விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்