Rock Fort Times
Online News

இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது கடந்த 7 மாதங்களில் மிக அதிகமாகும். இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,309 ஆக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மற்றும் , பீகாரில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவாவில் 47 பேருக்கும், கேரளாவில் 41 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்