Rock Fort Times
Online News

திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள்…

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறப்போகிறது. ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணி அளவில்(2024) பிறக்கிறது. இதனை ஒட்டி இன்று இரவு முதல் நாளை வரை பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியான முறையில் கொண்டாட பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் நடமாடும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ஜங்ஷன் ரெயில் நிலையம் போன்ற இடங்களில் போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இன்று நள்ளிரவு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக ஓட்டுவது, அதிக சத்தத்துடன் வாகனத்தை ஓட்டி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்