கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. கனமழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 12,536 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 29,552 கன அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,749 கன அடியாக உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.