விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் அருகே மனப்பூண்டி பகுதியில் இருந்த அவரை போலீசார் இன்று ( 24.07.2023 )அதிகாலையில் கைது செய்து விக்கிரவாண்டிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.