திருச்சி, உறையூர் பாளையம் பஜாரில் மீ கிளினிக் அண்ட் பார்மசி திறப்பு விழா நடைபெற்றது. இதன் உரிமையாளரும், மருத்துவருமான டாக்டர் யூ.சக்தீஷ்வரன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். இதில், வயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டப உரிமையாளர் எஸ். சக்திவேல், திருச்சி ராக்போர்ட் நியூரோ சென்டர் டாக்டர் வேணி, அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் சிவ இளங்கோவன், மதுரை அப்போலோ மருத்துவமனை டாக்டர் முத்து தன்யாமணி, ஜி.வி.என். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சக்தி யாதவ், டாக்டர்கள் சிவம், பிரபு சங்கர், தொழிலதிபர் கோபி கண்ணு, முருகப்பா ஸ்டேஷனரீஸ் சண்முகராஜன் மற்றும் மருதூர் திருநாவுக் கரசு, மருதூர் பிச்சைக்கண்ணு, திம்மாச்சிபுரம் செல்வம் உள்ளிட்ட நண்பர்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிர முகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மருத்துவர் சக்தீஷ்வரன் கூறும்போது, எனக்கு ஏற்கனவே பல ஆண்டுகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
திருச்சி திருவானைக்கோவிலில் ஸ்ரீ மீனாட்சி பாலி கிளினிக் அண்ட் பார்மசியும் நடத்தி வருகிறேன். இதன் அடுத்த கட்டமாக தற்போது உறையூர் பாளையம் பஜாரில் மீ கிளினிக் அண்ட் பார்மசியை ஆரம்பித்து உள்ளேன். இங்கு குழந்தைகளுக்கான சிகிச்சை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கை, கால் வீக்கம், ரத்த சோகை, மாத விடாய் ‘கோளாறுகள், காய்ச்சல், சளி மற்றும் இருமல், காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள், சைனஸ், அலர்ஜி, தோல் வியாதிகள் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
Comments are closed.