Rock Fort Times
Online News

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா…

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ – இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மன்றம், அறிவியல் மன்றம், கணித மன்றம், சமூக அறிவியல் மன்றம், வணிகவியல்
மன்றம், கணினி மன்றம், உரையாடல் மன்றம், தேசிய பசுமைப்படை, வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பசுமை மன்றம், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
மன்றம் ஆகிய மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் ரிப்பன் வெட்டி மன்றங்களை துவக்கி வைத்தார். அப்போது மன்றங்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மன்றத்தின் நோக்கம், செயல்பாடு குறித்து எடுத்துக் கூறினர். அப்போது சிறப்பு விருந்தினர் மன்றங்கள் சிறப்புடன் செயல்பட வாழ்த்து கூறியதோடு, மாணவர்கள் தங்கள் பன்முகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மன்றங்கள் வழிவகுக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், அலைபேசி பயன்படுத்துவதைக் குறைத்து படைப்பாற்றலை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பள்ளியின் முதல்வர், ஒன்றுபட்டால் உயர்வு உண்டு.அனைவரும் ஒன்றிணைந்து பள்ளியின் மேன்மைக்கு வழிவகுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ், துணை முதல்வர் அருட்சகோதரர் பன்னீர் செல்வம் மற்றும் அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்