கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(25-06-2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ராஜ்குமார், மகாமுனி, காளியப்பன், ப்ரீத்தா விஜய் ஆனந்த், ராமு, கலைப்புலி பாண்டி, லோகராஜ், விஜய சுரேஷ், வழக்கறிஞர் ஐயப்பன், பெருமாள், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல்ஹமீது, தொழிற்சங்கம் திருப்பதி, மாநகர் மாவட்ட அவை தலைவர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் மில்டன்குமார் ஆகியோர் வரவேற்றனர். கழக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் சந்தோஷ் குமார் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அவை தலைவர் அர்ஜுனன், மாவட்ட துணை செயலாளர் வசந்த் பெரியசாமி, நிர்வாகிகள் இளங்கோவன், தமிழன் , தொழிற்சங்கம் மணி, விஜி ,தமிழ்ச்செல்வன், கார்த்தி, வெல்டிங் சிவா, அன்வர் அலி, முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.எம். மணிகண்டன், மலைக்கோட்டை சங்கர், அலெக்ஸாண்டர், மோகன், குமார், அருள்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.