Rock Fort Times
Online News

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓடிய 4 வாலிபர்கள் சிக்கினர்- 2 பேருக்கு வலை…!

திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ​​முதலியார் சத்திரம் பெல்சி மைதானம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் 6 பேர் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை பார்த்தவுடன் அந்த 6 வாலிபர்களும் வேகமாக ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில், 4 பேர் சிக்கிக் கொண்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வாலிபர்களை சோதனையிட்ட போது
2 கத்தி, உருட்டு கட்டைகள், ரோப் கயிறு, மிளகாய் தூள் பாக்கெட் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மேல கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 20), நட்டு (எ) நடராஜன் ( 22), கீழப்புதூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் ( 23) அஜித் ( 23) என்பதும், பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில், வாலிபர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
தப்பி ஓடிய தனுஷ், சபரி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்