திருச்சியில் 100 ஜோடிகள் ஜானகி டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரம் பாடி அசத்தல்- உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…!
“கண்மணி அன்போடு” என்ற தலைப்பில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடிய 100 டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரம் பாடும் இசை நிகழ்ச்சி திருச்சி திண்டுக்கல் ரோடு தீரன் நகரில் உள்ள எஸ்.ஏ.எஸ். மகாலில் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் திருச்சி, புதுக்கோட்டை,
கரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்றனர். இந்த இசை நிகழ்ச்சி காலை 8 மணி அளவில் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி எஸ்.ஜானகி பாடிய டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக பாடி அசத்தினர். வித்தியாசமான இந்த இசை நிகழ்ச்சி வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றது. இதற்காக பார்வையாளர்கள் சிலர் வருகை தந்திருந்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், திரைப்பட பின்னணி பாடகி சுர்முகி ராமன், திலகரஞ்சனி, சித்ரா திருவாளன், ஜெயந்திராணி ஆகியோர் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பினிக்ஸ் குழுவினர் மற்றும் கைண்யா சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனர்கள் வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி, ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். திரைப்பட பின்னணி பாடகி ஜானகி இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.