நிலமோசடி வழக்குப் புகாரின் பேரில் கேரளத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கேரளத்தில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்னிலையில் காலை ஆஜர்படுத்தப்பட்டார். இந்த 2வது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது
Comments are closed.