திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும், நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துமமாவட்ட தலைவர் சூா்யா, மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரது தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து மாணவா் சங்கத்தினா் கையில் பதாகைகள் ஏந்தி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவன் மற்றும் அவரது தந்தைக்கு நீதி கேட்டு கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.