3 மாதகாலமாக, வேஸ்ட் பேப்பர் தொழிலாளர்கள் 12 பேருக்கு வேலை தராததால் வருமானம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ள பிரச்சனையில் வேலை தர நடவடிக்கை எடுக்காமல், வாய்தா மட்டுமே போடும் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையை கண்டித்தும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வண்டி லோடு இறக்கியதற்கு கூலி தராமல் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து, கூலி பாக்கியை பெற்றுத்தர வேண்டும். பல ஆண்டு காலமாக வேலை செய்யும் பழக்கடை சுமைப்பணி தொழிலாளிகளுக்கு வேலை தராமல் வேறு தொழிலாளியை வைத்து லோடு இறக்கிய போது வேலை கேட்டுச் சென்ற தொழிலாளர்கள் மற்றும் சிஐடியூ சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் மீது, வியாபாரிகள் கொடுத்த புகார் மீது பொய்வழக்கு போட்டுள்ள காந்தி மார்க்கெட் காவல்துறையை கண்டிப்பது, பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ திருச்சி மாநகர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டக்குழு சார்பில் இன்று(25-01-2025) காந்தி மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், சிபிஎம் பகுதி செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் மணிகண்டன், கார்த்தி, இமாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.