தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த விஷயங்களை ஆய்வு செய்யும் ஆலோசனை கூட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று கூட்டினார். இது ஒருபுறம் இருக்க தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை சந்தித்து பேசினார். அப்போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்துவதுடன், ஆராய்ச்சி பணிகளையும் விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும் அழைத்துப் பேச ஆளுநர் முடிவெடுத்துள்ளார். அதற்கான கூட்டம் சென்னையில் 26-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திலும், தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கும் நிலையில் அரசு சார்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.