திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்யபிரியா ஐபிஎஸ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர், ஏர்போர்ட் பகுதி, பாலக்கரை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்றதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, திருச்சி கண்டோன்மெண்ட், செசன்ஸ் கோர்ட், ஸ்ரீரங்கம், கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி விற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உறையூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.