Rock Fort Times
Online News

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று( ஜூன் 22) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்… த.வெ.க.பிரமுகர் போஸ்.செல்வகுமார் வழங்கினார்..!

தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜோசப் விஜய்க்கு இன்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் இன்று(22-06-2026) திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா தங்க மோதிரம் தொழிலதிபர் போஸ் செல்வகுமார் வழங்கினார்.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் எப்.எக்ஸ்.நெப்போலியன், பிரேம்குமார், விஜய் ஆனந்த், ராயல் சேட்டு, ஜெயராஜ், வழக்கறிஞர் திலீப், வேதாந்திரி நகர் பாலு, துவாக்குடி சசி, ஆயில் மில் மதன், உய்யகொண்டான் திருமலை செல்வா, மனோஜ், சாமி, சுரேஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்