திருச்சி அருகேயுள்ள குண்டூரை சேர்ந்தவர் செல்வராணி (35). இவர் தன்னுடைய மகன் சஸ்வந்த் (8) மற்றும் மகள் கமலிசா (12) ஆகிய இருவரையும் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்திற்கு தன்னுடைய பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவர் பின்னால் வேறொரு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மர்ம நபர்,செல்வராணி அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். சுதாரித்துகக்கொண்ட செல்வராணி, தங்க செயினை கையில் இறுக பிடித்துக்கொள்ளவே, அறுபட்ட செயினின் பாதியை திருடன் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டான். இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.