கோடை காலத்தை சமாளிக்கும் வகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தஞ்சாவூர் பழைய பால்பண்ணை அருகில் நீர் – மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், கே.என். சேகரன், லீலா வேலு, மூக்கன், சந்திரமோகன்,பொன் செல்லையா, நூர் கான், எம்.தமிழ்செல்வம், சரோஜினி மற்றும் பகுதிகழக செயலாளர்கள் ஏ.எம்.ஜி விஜயகுமார்,ஓ.நீலமேகம்,தர்மராஜ், மோகன் பாபு,டி.பி.எஸ்.எஸ். ராஜ்குமார், மணிவேல், சிவக்குமார், மாநகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
Comments are closed.