Rock Fort Times
Online News

இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு: பலே வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்…

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போயின. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. அந்த புகார்களின் அடிப்படையில் வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை தள்ளிக் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் உறையூர் பகுதியைச் சேர்ந்த சபி ( 45 ), அபுதாபி (35 ) என்பதும் அவர்கள் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்