Rock Fort Times
Online News

அறிவுசார் நூலகத்தை  இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி பார்வையிட்டனர்…

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக முடிவடைந்த திட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5-1-2024) காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அந்தவகையில் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாலக்கரை பிரதான சாலையில் வேர் ஹவுஸ் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள துணை நீரேற்று நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அறிவு சார் மையத்தை பார்வையிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்