Rock Fort Times
Online News

இளைஞர்களுக்காக ரூ.2 லட்சம் கோடியில் ஐந்து திட்டங்கள்-மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு…!

நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று(23-07-2024) 2024-25 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாணவர்கள் உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்

* ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* சென்னை- ஹைதராபாத்- விசாகப்பட்டினம் இடையே தொழில் வழித்தடம் அமைக்கப்படும்.
*முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொழில் கடன் ரூ.10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெண் குழந்தைகள் பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்.

*80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் ‘பிஎம் கரீப் அன்ன யோஜனா’ திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

*4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு
ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு குறு தொழில் நிறுவனங்கள், கல்வி ஆகியவை பிரதமரின் ஐந்து அம்சத் திட்டத்தில் அடங்கும்.

தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்