தெருவில் காகிதம் சேகரித்து பிழைப்பு நடத்தியவருக்கு அடித்தது யோகம்- காரில் அழைத்துச் சென்று அரசு வேலை வழங்கிய அமைச்சர்…! ( வீடியோ இணைப்பு)
உறவுகளால் நிராகரிக்கப்பட்டவர்கள், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் தெருக்களில், சாலையோரங்களில் கிடக்கும் குடிநீர் காலி பாட்டில்கள், மது பாட்டில்கள், பேப்பர்கள் ஆகியவற்றை சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருச்சியைச் சேர்ந்த ராஜா. இவர் தெருவில் கிடக்கும் காகிதங்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். வழக்கம்போல நேற்று அதிகாலை இவர், சென்னை கிண்டி பகுதியில் காகிதங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது, தெருவோரம் காகிதம் சேகரித்து கொண்டிருந்த ராஜா, அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். உடனே, அவரை அழைத்து அமைச்சர் விசாரித்தபோது அவர் தனது நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து, அமைச்சர் தன்னுடைய காரில் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து, உடை மற்றும் உணவு கொடுத்தார். பின்னர், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர், மருத்துவர்களிடம் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சொன்னார். தொடர்ந்து, மருத்துவ மனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணி வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிர மணியத்தின் மனிதநேயமிக்க இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments are closed.