திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இணை ஆணையர் கார்த்திக், திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி சிவகங்கை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி இணை ஆணையர் (சரிபார்ப்பு) ஆணையர் அலுவலகம், சென்னைக்கும், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் விழுப்புரம் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.