லஞ்சம் வாங்குவதற்கு துணை புரிந்த பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை..
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தராக பணியாற்றி வந்தவர் கீதா. வழக்கு ஒன்றில் கீதாவை விடுவிப்பதற்காக திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட், கீதாவிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை பெற்றபோது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரால் கடந்த மாதம் 15 ம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது டிஎஸ்பி ஆல்பர்ட்க்கு அதே அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஹேமா கேத்தரின் உதவி புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் ஹேமாவிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ. வருண்குமாா் ஐபிஎஸ்சிற்கு பரிந்துரை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் , ஹேமா கேத்தரினை ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.