தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கே.எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…!
மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பங்கேற்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கே.எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி இணைந்து நடத்திய வணிகர்களுக்கான இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் ஹாலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி உரிமையாளருமான கே.எம்.எஸ்.ஹக்கீம் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம், திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகர செயலாளர் வி.பி.ஆருமுகப்பெருமாள், மாநகர பொருளாளர் ஜானகிராமன், திருச்சி வெங்காய தரகு வர்த்தக மண்டி சங்கத்தின் செயலாளர் வெங்காயமண்டி தங்கராஜ், மாநில துணைத்தலைவர்கள் எம்.சின்னச்சாமி, ஜெ.சுப்ரமணியன், கே.எம்.எஸ்.ஹக்கீம், பி.அப்துல்ஜப்பார், தொட்டியம் செல்வராஜ், தில்லை மெடிக்கல் மனோகரன், சில்பா ரெங்கராஜன், மாநில இணை செயலாளர்கள் திருப்பதி ஸ்டீல் திருப்பதி, யு.எஸ். கருப்பையா, கமலக்கண்ணன், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.ஹக்கீம், செயலாளர் தொட்டியம் எஸ்.கார்த்திக், பொருளாளர் ஆர்.பிரசன்னன், திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செயலாளர் திருமாவளவன், பொருளாளர் அப்பாதுரை, இளைஞர் அணி துணைத்தலைவர் ஷேக் அலாவுதீன், திருச்சி சத்திரம் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்கம் ராயல் சேட்டு, காந்தி மார்க்கெட் என்.கே.இஸ்மாயில் கான், டோல்கேட் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பிரைஸ் அகமது, முகமது ராஜா, கவுன்சிலர் பைஸ் அகமது, முகமது ராஜா, எஸ். டி. பி. ஐ.கட்சி திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி,வார்த்தகர் அணி திருச்சி மண்டல தலைவர் சாதிக்,கட்சியின் மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக், செயலாளர் தளபதி அப்பாஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் டாக்டர் பக்ருதீன் மற்றும் வியாபார பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.