2 இடங்களில் வாக்குரிமை: சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதி வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைப்பு…!
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்றுடன்(27-03-2024) முடிவடைந்தது. 39 தொகுதிகளுக்கும் மொத்தம் 1,403 மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்குரிமை இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு செல்வ கணபதிக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளதுடன் அவரது வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். திமுக வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.