திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது சகோதரர் ராசு. இருவருக்கும் சொத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது பழனியாண்டியின் மகன்களான முருகேசன் (வயது 37), கருப்பையா (38) மற்றும் உறவினரான பிச்சை (50) ஆகிய மூன்று பேரையும், ராசுவின் மகன்களான செல்லதுரை, பாலையா, பொன்னுசாமி என்ற குஞ்சான் ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் முருகேசன் உயிரிழந்தார். முருகேசனின் அண்ணன் கருப்பையா, மாமனார் பிச்சை ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கொலை குறித்து புத்தாநத்தம் போலீசார் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராசு (75), அவரது மகன் செல்லதுரை (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராசுவின் மகன்கள் பாலையா, பொன்னுச்சாமி என்ற குஞ்சான் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பெண்கள் தலைமறைவாக உள்ளனர். அந்தப் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.