தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினருக்கான தபால் வாக்குகள் அனைத்தும் இன்று(17-04-2024) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த காலங்களில் தபால் வாக்குகளை ஒரு ஏஜென்ட் மூலம் அரசு நியமித்து கொண்டு போய் சேர்க்கும் நிலை மாற்றப்பட்டு இந்த முறை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து தபால் வாக்குகளை பிரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் மட்டும் சுமார் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 2547 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதில் 127 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஒரு பொது கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு அவருடைய மேற்பார்வையில் வாக்குப்பதிவு நடைபெறும். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 35 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா உட்பட மொத்தம் 36 சின்னங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கண்ட்ரோல் யூனிட் ஒரு விவி பேலட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான 19-ம் தேதி காலை 7 மணியிலிருந்து வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் மொத்தம் 7 கம்பெனிகள் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு கம்பெனியில் 70 வீரர்கள் வீதம் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு தமிழ்நாடு காவல்துறையினர் 4057 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.