மருத்துவ நுழைவு தேர்வுகளில் ஒன்றான இளங்கலை நீட் தேர்வு வருகிற
மே 3-ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தநிலையில் ‘நீட்’ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை தேசிய தேர்வு முகமை (NTA) திட்டவட்டமாக மறுத்துள்ளது. தேர்வு தொடர்பான அனைத்து விஷயங்களும் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், இணையத்தில் பகிரப்படும் பொய் செய்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் தேர்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது. வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இதுபோன்ற போலி தகவல்களை இணைய குற்றப் பிரிவு அதிகாரிகளிடமோ அல்லது நேரடியாக NTA-விடமோ புகாரளிக்குமாறு தேர்வு முகமை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீட் 2026 தேர்வுக்கான அனுமதி அட்டைகள், கடந்த ஏப்ரல் 26-ம் தேதியன்று தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கடைசி நேரச் சிக்கல்களை தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி அட்டைகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.