தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி்: ASSISTANT SURGEON(GENERAL).
இதற்கான சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500.
1.7.2024 – தேதியின்படி பொதுபிரிவினருக்கு 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம், டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினர் 47-க்குள், முன்னாள் ராணுவத்தினர் 50 -க்குள் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர பிரிவினருக்கு ரூ.1000 கட்டணம் ஆகும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 15.5.2024 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.