Rock Fort Times
Online News

இந்தியாவில் லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்..!

இந்​தி​யா​வில் முதல் வணிக ரீதியி​லான நீர் விமான சேவை லட்​சத்​தீ​வில் இருந்து தொடங்க உள்​ளது. இந்திய பயணி​கள் விமானப் போக்​கு​வரத்​து, தரை வழியில் மட்​டுமல்​லாமல் தற்​போது நீர் வழி​யிலும் விமானசேவை வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன் முதல் கட்​ட​மாக லட்​சத்தீவில் இருந்து நீர் விமான சேவை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. ‘ஸ்​கைஹாப் ஏவி யேஷன்’ என்ற நிறு​வனம் இதற்​கான அனு​ம​தியை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​திடம் இருந்து பெற்றுள்ளது. முன்​ன​தாக உத்​த​ராண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகு​தி​யில் ஸ்கைஹாப் ஏவி​யேஷன் நிறு​வனம் கங்கா தடுப்​பணை​யில் இருந்து விமானத்தை மேலே கிளப்​பி​யும், நீரில் இறக்கி​யும் சோதனையை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளது. இதையடுத்​து, சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகத்​தின் அனு​மதி கிடைத்​துள்​ள​தால், முதல் முறை​யாக வணிக ரீதியி​லான பயணி​கள் நீர் விமானத்தை லட்​சத்​தீ​வில் இருந்து இந்​நிறு​வனம் இயக்க உள்​ளது. இந்​தச் சேவை லட்​சத்​தீவுப் பகு​தி​யில் உள்ள 5 தீவுகளுக்கு இயக்​கப்பட உள்​ளது. இந்​நிறு​வனத்​தின் நீர் விமானத்​தில் ஒரே நேரத்​தில் 19 பேர் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் சுற்​றுலா பயணிகளின் வருகை அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்கப்படு​கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்