நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் VOTE 100% என்ற வடிவமைப்பில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் இருந்து திருவெறும்பூர் கடைவீதி வழியாக மாணவ மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு கோஷமிட்டு 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விழிப்புணர்வு முகாமில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.