Rock Fort Times
Online News

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: காவல்துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2ம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல், களப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்