திருச்சி,பாலக்கரையில் பயங்கரம் சரக்கடிக்க பணம் கேட்ட மருமகன் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய மாமனார்…
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 61) .இவரது மருமகன் அக்னி வீரன் (24). இவர் தனது மாமனாரான பால்ராஜிடம் சரக்கடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார் அதைத் தொடர்ந்து அக்னி வீரன் பால்ராஜை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மருமகனை குத்தினார். இதில் அக்னி வீரனின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.