Rock Fort Times
Online News

அரசு பேருந்தில் மாணவர்களை ஏற்ற மறுத்த ஓட்டுனர்- நடத்துனர்….(வீடியோ இணைப்பு)

அவதியுற்ற மாற்றுத்திறனாளி மாணவி....

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு செல்லும் அரசுப் பேருந்துகள், கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களை ஏற்ற மறுத்து வருகின்றனர். அப்படியே சில பேருந்துகள் நின்றாலும் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்துவதால் மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியை பேருந்து நடத்துனர் சிவா என்பவர் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தும் தொடர்ந்து இவ்வாறு செய்து வருகிறார். அதைப் பற்றி கேட்டால் நடத்துனர் தரக்குறைவாக பேசுகிறார். இதுகுறித்து பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே, மாணவ, மாணவிகளை தரக்குறைவாக நடத்தும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்