சசிகலா- ராமதாஸ் கூட்டணியில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் ராம்குமார் 40,282 வாக்குகள் பெற்று அசத்தல்…!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டன. அதேபோல, சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகமும், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்
சசிகலா கட்சி சார்பில் டாக்டர் ராம்குமார் என்பவர் போட்டியிட்டார்.
35 வயதான இவர் மறவர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் ஜாதி, மத பேதமின்றி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். மக்கள் செல்வாக்கு மிக்கவராக அறியப்பட்ட இவர், இத்தொகுதியில் களமிறக்கப்பட்டார். இந்த தொகுதியில் திமுக சார்பில் ராஜ கண்ணப்பன், அதிமுக சார்பில் மலேசியா பாண்டியன், தமிழக வெற்றி கழகம் சார்பில் மலர்விழி, நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இந்த தொகுதியில் ராஜ கண்ணப்பன் (திமுக) 68,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மலர்விழி 51,405 வாக்குகளும், மலேசியா பாண்டியன் 47,501 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா 15,112 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதியில்
சசிகலா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராம்குமார் பெற்ற வாக்குகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர், 40,282 வாக்குகள் பெற்றார்.
சசிகலா- ராமதாஸ் கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
1 முதுகுளத்தூர் 40,282
2 உசிலம்பட்டி 16,620
3 சாத்தூர் 11,488
4 தென்காசி 7,715
5 சங்கரன்கோவில் 6,519
6 திருமங்கலம் 2,668
7 மேலூர் 2,628
8 பரமக்குடி 2,239
9 வாசுதேவநல்லூர் 1,993
10 மன்னார்குடி 1,949
11 சிவகாசி 1,729
12 ராஜபாளையம் 1,547
13 சிவகங்கை 1,170
14 அருப்புக்கோட்டை 1,147
15 நாங்குநேரி 1,048
16 போடிநாயக்கனூர் 659
17 விராலிமலை 645
18 திருப்பத்தூர் 539
19 காரைக்குடி 532
20 ஸ்ரீபெரும்புதூர் 451
21 எடப்பாடி 429
22 சீர்காழி 365
23 அரவக்குறிச்சி 290
24 லால்குடி 192
25 காட்பாடி 175
26 பல்லாவரம் 147
27 குளச்சல் 142
28 செங்கல்பட்டு 117
29 திரு.வி.க நகர் 94
30 ஆம்பூர் 87
அதிகபட்ச வாக்குகள்:
முதுகுளத்தூர் (40,282)
உசிலம்பட்டி (16,620)
குறைந்தபட்ச வாக்குகள்:
ஆம்பூர் (87) 30 தொகுதிகளில் மொத்த வாக்குகள்: 1,04,006.

Comments are closed.