Rock Fort Times
Online News

கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேசவில்லை- தே.மு.தி.க…!

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் இன்று(07-02-2024) ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மாவட்ட செயலாளர்கள் 79 பேர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. கூட்டத்தில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தே.மு.தி.க. தலைமை திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* மறைந்த உலகத் தமிழ் தலைவர் கேப்டன் விஜயகாந்த் க்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பாரத பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கும், விஜயகாந்த் மீது அளவில்லா அன்பு வைத்திக்கும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக்க மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், புகழஞ்சலி செலுத்திய கட்சியினருக்கும் நெஞ்சம் மறவாத நன்றியை தேமுதிக தெரிவித்துக்
கொள்கிறது.

* பத்மபூஷன் விஜயகாந்த்க்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க வேண்டும்.

* தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட வேண்டும்.

* தேமுதிக இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பற்றி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை பிரேமலதா விஜயகாந்த்க்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக விஜயகாந்த் மறைவு மற்றும் கட்சியினர் மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்