சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் திருச்சியில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க முடிவு…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.முக செயல் வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார், சௌந்தர பாண்டியன், மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கவுன்சிலர்கள் கிராப்பட்டி செல்வம், விஜயா ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
கே. என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வருகிற 24-ந் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாட்டிற்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் சீருடையுடன் பங்கேற்பது, மாநாட்டினை மாபெரும் வெற்றி அடைய செய்ய திமுகவினர் பெருமளவில் கலந்து கொள்வது, சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வரலாறு காணாத மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அசுர வேகத்தில் இரவு பகல் பாராமல் அரசு சார்பில் நிவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களை பாதுகாத்திட்ட திமுக அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவுக்கும் மற்றும் அமைச்சர்கள் ,அரசு அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், விவசாய அணி செயலாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், ராம்குமார், இளங்கோ, நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச் செல்வி, நிர்வாகிகள் டாக்டர் சுப்பையா, டாக்டர் தமிழரசி சுப்பையா, தென்னூர் அபூர்வாமணி, துபேல் அகமது, தென்னூர் பி. ராஜ்குமார், எம்.ஆர்.எஸ்.குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.