Rock Fort Times
Online News

இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம்: 19-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., வரும் தேர்தலிலும் மூன்றாவது( ஹாட்ரிக்) முறையாக வென்று ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.இதனிடையே தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது கூட்டம் டெல்லியில் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க வருகிற 19 ம் தேதி காலை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்