தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிர் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. இவர்களது நினைவிடங்களில் திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில்,திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மாவட்ட செயலாளர் முசிறி கலைச்செல்வன், சக்தி ஆற்றல் அரசு, கலைச்செல்வன், திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெல் சந்திரசேகரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.