Rock Fort Times
Online News

பொதுக்குளத்தில் மீன் பிடிப்பதில் தகராறு- 6 பேர் கைது…! திருச்சி ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை !

திருச்சி மாவட்டம் நத்தமாடிபட்டி கீழகுறிச்சி கிராமத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் ஊர் பொதுக் குளத்தை அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் வந்த பிறகு கடந்த 6 வருடமாக ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் குளம் சென்ற நிலையில் அதில் மீன்குஞ்சுகள் விடப்படாமல் இருந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டனர்.

அந்த மீன் குஞ்சுகள் வளர்ந்த நிலையில் நேற்று பொதுமக்கள் மீன்பிடிக்க சென்ற போது அங்கு வந்த ஒருவர் இந்த குளம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது, தனக்கு ஒரு தொகையை கொடுத்து விட்டு மீன்பிடியுங்கள் என்று கூறியதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த நபர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்று அதிகாலை 4 மணிக்கு 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஐி. அலுவலகத்தை அக்கிராமத்தை சேர்ந்த 150 பேர் முற்றுகையிட்டனர். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றுகூறி கோரிக்கைவிடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்