திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூருக்கு மாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சுக்கு பின்னால் 5.35 மணிக்கு புறப்பட்ட மற்றொரு தனியார் பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்திக்கொண்டு சென்றது. அந்த பஸ் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ரைஸ் மில் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டிருந்தது. அங்கு 2 பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த 2 தனியார் பஸ்களும் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற பிரச்சினைகள் அடிக்கடி நடப்பதாகவும், இனிமேல் இப்பிரச்சினை நடக்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.