இளம் எழுத்தாளர்களாக மாறிய தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள்- 5 நூல்கள் படைப்பு… * துணைவேந்தர் பாராட்டு!
திருச்சி, சமயபுரத்தில் இயங்கி வரும் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஐந்து நூல்களை எழுதி சாதனை படைத்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி துறை மாணவர் இராஜதுரை, மருத்துவக் கல்வியை எளிமைப்படுத்தும் நோக்கில் ‘ஃப்ராக்ச்சர்ஸ் சிம்ப்ளிஃபைடு’ மற்றும் ‘சிம்ப்ளிஃபைடு பெரிபெரல் நெர்வ் சிஸ்டம் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். அதேபோல், சட்டப்பள்ளி மாணவர் என். கீர்த்திவாசன், சட்ட நுணுக்கங்கள் மற்றும் சிந்தனைத் திறனை விவரிக்கும் லீகல் மேக்ஸிம் அண்ட் ப்ராசஸ் ‘தி பாரதிய சக்ஷ்ய அதினியம்- 2023 தி ஆர்ட் ஆஃப் ஆஸ்கிங் ஒய் ஆகிய மூன்று நூல்களைப் எழுதி சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் எழுத்துப் பங்களிப்பைப் பாராட்டி நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சி.கே. ரஞ்சன் இரு மாணவர்களுக்கும் கேடயம் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் பதிவாளர், பல்வேறு துறைகளின் டீன்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நூலகர்கள் எஸ். சுதா மற்றும் கே. சுபாஷினி ஆகியோர் ஒருங்கிணைத்ததனர்.

Comments are closed.