சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அந்தப் பெண் குளியல் அறையில் குளிக்கும் போது ஏதோ கண்ணில் தென்பட்டுள்ளது. அப்போது அவர் சுவற்றை உற்று நோக்கிய போது Spy pen என்ற ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது . இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர், அந்த கேமராவை மீட்டு பார்த்தபோது அதில் குளியலறை காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வீட்டின் உரிமையாளரின் மகனான முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.