திருச்சி உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் (வயது 50). இவர், அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு சென்ற அவர் மதிய உணவுக்காக வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே, கனகவேல் வீட்டின் கதவை சாத்தி பூட்டினார். பின்னர் உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட முயன்ற வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் (23), பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் பதன் (19) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.