மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை திருவிக திடலில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று(23-07-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கையில் பதாகைகளை ஏந்தி திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி, பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியம், தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்தி மற்றும் லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.