திருச்சி, திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜூலை 25-07-2024 (வியாழக்கிழமை) தேதி மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சகரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர் சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார்கோவில் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட டோல்கேட், பிச்சாண்டார் கோவில், மாருதி நகர், கோகுலம் காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த் நகர், ராயர் தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் 25-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.