Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில்  ‘கடைகளில் தமிழில் பெயர் பலகைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வணிகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  இதுதொடர்பாக  சென்னை தலைமை செயலகத்தில் நடந்த வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் அதிகரிக்கப்படும். கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்ற வேண்டும். வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என யாரும் சொல்லக்கூடாது.  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.  வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது. வணிகர்கள் நலனுக்காக திமுக ஆட்சிக்காலங்களில் எண்ணற்ற உதவிகளை வழங்கி உள்ளோம். வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று திருத்தியுள்ளோம். வணிகர்களுக்காக ரூ.3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம். வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால், வழங்கப்படும் நிதி  ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்