Rock Fort Times
Online News

திருச்சி சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு : மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் அருகேயுள்ள பழுர்  காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து மகன் திராவிட மணி (வயது40). இவர்,  சட்ட விரோதமாக
மது விற்பனை செய்ததாக கூறி  செப்டம்பர்  27ந் தேதி ஜீயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். மறுநாள் இரவு அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து  கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நெஞ்சுவலி ஏற்பட்டதால் திராவிட மணி உயிரிழந்ததாக போலீசார் தரப்பிலும், சிறையில் வைத்து திராவிடமணியை போலீசார் தாக்கியதால்தான் அவர் இறந்ததாக திராவிட மணியின் உறவினர்களும் சொல்லி வருகின்றனர்.  மேலும் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சுமார் 3 நாட்களாக முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் நடந்து 4 வது நாளான நேற்று உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சிறைக் கைதி உயிரிழந்த செய்தி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் முதல்வரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் திராவிட மணி இறந்தது தொடர்பாக திருச்சி மாவட்ட 6 வது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுபாஷினி, ஜீயபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது, அவரை கைது செய்து வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் அவரை கைது செய்தது தொடர்பான வழக்குப் பதிவு ஆவணங்கள், மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மேலும், திராவிடமணி கைது சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரி மற்றும் பணியிலிருந்த போலீசார் உள்ளிட்ட காவல் நிலையத்திலிருந்த பலரிடமும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.  இந்நிலையில் திராவிடமணியின்  உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதால்  போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்திருக்கிறார் என்றும், இதுகுறித்து மேல்மட்ட விசாரணை நடத்த கோரியும்,  மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரியும்  திராவிட மணியின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நாளை (03-10-2024) ந் தேதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்