Rock Fort Times
Online News

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம்…!

அண்மையில் தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த நிலையில்  தற்போது துணை  முதலமைச்சரின் தனிச்செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலர் பணியையும் கூடுதலாக சத்யபிரதா சாஹூ கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உயர்கல்வித்துறை செயலாளராக கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்  செய்யப்பட்டுள்ளார். மின்வாரியத்துறை புதிய தலைவர் நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறி துறை செயலாளராக  அமுதவள்ளியும்,  கல்லூரி கல்வி இயக்குநராக சுந்தரவள்ளி யும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக மொத்தம் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்